1980-90-களில் மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்த தம்பி கண்ணந்தானம் உடல்நலக் குறைவால் நேற்று கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 65.

அவர் இயக்கிய 'ராஜாவிண்டே மகன்' திரைப்படம்தான் மோகன்லாலை கேரளாவில் ஒரே இரவில் சூப்பர் ஸ்டாராக்கியது.

இதே படம்தான் தமிழில் 'மக்கள் என் பக்கம்' என்கிற பெயரில் சத்யராஜ் அம்பிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடியது.

மேலும் 'தவலம்', 'திவசம்', 'பாஸ்போர்ட்', 'இந்திரஜாலம்', 'நாடோடி', 'நிர்ணயம்', 'மாந்திரிகம்'  பூமியிலே ராஜாக்கமார்’ உட்பட 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய தம்பி சில படங்களை தயாரிக்கவும் சில படங்களில் நடிக்கவும்  செய்தார். அவரது படங்களில்ஆக்சன் படங்களுக்கே உரித்தான விறுவிறுப்பான திரைக்கதையும், இயக்கமும் இருக்கும். 

சமீப காலமாக அவருடைய ராஜாவிண்டே மகனின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்காக மோகன்லாலிடம் கால்ஷீட் கேட்டுக் கொண்டேயிருந்தார். லாலும், ’இதோ இதோ’ என்று ஏதேதோ  சொல்லித் தள்ளிப் போட்டுக் கொண்டே போனார். இப்போது ஒரேயடியாக இயக்குநர் தம்பி கண்ணந்தானம் விடைபெற்றுவிட்டார்.