நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளியானது. இந்த படத்தை தொடந்து சூர்யா நடித்து முடித்துள்ள 'என்.ஜி.கே' படம் ஒரு சில காரணங்களால் தாமதம் ஆகி கொண்டே போகிறது.

மேலும் சூர்யா 'காப்பான்' என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி என பலர் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை 'இறுதிச்சுற்று' பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். அதன் பின் சிறுத்தை சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா என்பது நாம் அறிந்தது தான்.

இந்நிலையில் சுதா கொங்கரா, இயக்க உள்ள படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு இணையவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. மோகன்பாபு போலவே இன்னும் ஒருசில பிரபலங்கள் இந்த படத்தில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் இந்த ஒரு மல்டி ஸ்டார் படமாக வேற லெவலில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை,  2D நிறுவனமும், ஆஸ்கார் விருது பெற்ற சிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.