கடந்த ஆண்டு மறைந்த சோ ராமசாமி ஒவ்வொரு வருடமும் தான் நடத்தி வரும்  துக்ளக் பத்திரிக்கையின் சார்பில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டாடுவார்.

ஆனால் இந்த வருடம் அவர்  இல்லை என்றாலும் , தற்போது அந்த பத்திரிக்கையின் பொறுப்பை ஏற்றிருக்கும் குருமூர்த்தி, சோ நடத்தியது போல் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொண்டாடவுள்ளார்.

எனவே வரும் 14ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் சோ அவர்களின்  நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த்  கலந்து கொள்ள இருக்கிறார்.

அதேபோல் சோவுக்கு மிகவும் பழக்கமான பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் வீடியோ மூலம் கலந்துரையாடவுள்ளார்.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொள்வதால், மோடி ரஜினியை சிறப்பிக்கும் விதமாக ஒரு சில வார்த்தைகள் வீடியோ மூலம் பேச உள்ளதாக கூறப்படுகிறது.