நடிகை லட்சுமி மேனனை நீண்ட நாட்களாக திரைப்படங்களில் காணமுடியவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு இச்செய்தி பெரும் அதிர்ச்சியாக இருக்கலாம். வயதான பெரியவர் ஒருவரை அவர் திருமணம் செய்துகொண்டுவிட்டதாக பரபரப்பான தகவல்கள் வருகின்றன.

இந்திய அளவில் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவராக இருப்பவர் சுஹெல் சேத். இவருக்கு வயது 55. இவர் விளம்பர பட நிறுவனங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் திரையுலகில் உள்ள பலரும் இவருக்கும் பழக்கம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மாடலும், நடிகையுமான லட்சுமி மேனனுடன் சுஹெல் சேத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலானது.

அதாவது 55 வயதான சுஹெல் சேத் 37 வயதான லட்சுமி மேனனை காதலித்து வந்தார். இந்த நிலையில் சுஹெல் சேத் தங்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக அவரது நிறுவனத்தில் பணியாற்றிய பெண்கள் பலர் புகார் அளித்தனர். மீ டூ விவகாரத்தில் சுஹெல் பெயர் அதிகம் அடிபட்டது. இதனால் சமூக வலைதளங்களில் இருந்து சேத் ஒதுங்கியிருந்தார்.

இந்த நிலையில் சுஹெல் சேத் திடீரென தனது காதலி லட்சுமி மேனனை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள லட்சுமி மேனன் வீட்டில் எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்தில் பிரபல அரசியல்வாதிகள் பிரஃபுல் படேல், அமர் சிங், ஜே பாண்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

55 வயதான சுஹெல் சேத் 37 வயதான லட்சுமி மேனனுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த லட்சுமி மேனன் தமிழ் படங்களில் நடித்து வரும் அந்த லட்சுமி மேனன் இல்லை. சுஹெலை திருமணம் செய்திருப்பவர், இந்திப்படங்களில் நடித்து வரும் லட்சுமி மேனன் ஆவார். எனவே இந்த திருமணத்தினால் அதிர்ச்சி அடைந்திருப்பவர்கள் இந்தி ரசிகர்கள் தான், தமிழ் ரசிகர்கள் இல்லை.