அல்ப காரணங்களுக்காக கமலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்காததால் நாளை  நடைபெற உள்ள சூலூர் தொகுதியின் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்துக்கள் குறித்து தனது பேச்சு சூப்பர் ஹிட்டான நிலையில் திரும்பத் திரும்ப தனது கருத்தை வலியுறுத்தி கமல் பிரச்சார மேடைகளில் பேசிவருகிறார். இதனால் பலத்த எதிர்ப்பு கிளம்பி சிலர் அவர் மீது செருப்பு, அழுகிய பழங்கள் மற்றும் முட்டைகளை வீசினார்.

அதற்கு அசராத கமல் தனது இந்துக்கள் பற்றிய பேச்சிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் தனது கருத்துகள் திட்டமிட்டுத் திருத்தி தவறான அர்த்தம் கற்பிக்கப்படுவதாகவும் கூறி வருகிறார். இந்நிலையில் சூலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள கமலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பியுள்ள மனுவில்,... சூலூர் தொகுதியில் எங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து கமல் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரத்துக்கு அல்ப காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே சூலூர் தொகுதியில் தேர்தலை உடனே ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.