பிரபல நடிகை எம்.என்.ராஜமின் கணவரும் பாடகருமான ஏ.எல்.ராகவன் மாரடைப்பால் மரணம்!

தென்னிந்திய திரையுலகில் 100க்கும் மேற்பட்ட பாடல்களையும், பல வெற்றிப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ள ஏ. எல். ராகவன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

mn rajam husband actor al raghavan death for heart attack

தென்னிந்திய திரையுலகில் 100 க்கும் மேற்பட்ட பாடல்களையும், பல வெற்றிப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ள ஏ. எல். ராகவன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.எல்.ராகவனுக்கு இன்று காலை 7 :30 மணியளவில், மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக அவரை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 87 வயதாகும் இவர், தன்னுடைய மனைவி எம்.என்.ராஜமுடன்  வசித்து வந்தார்.

mn rajam husband actor al raghavan death for heart attack

இவர்களுக்கு, பிரம்மலட்சுமண் மற்றும் நளின மீனாட்சி என ஒன்று மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

ஏ.எல்.ராகவன், காலத்தால் அழியாமல் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்க கூடிய பல பாடல்களை பாடியுள்ளார். தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் இவரும் ஒருவர். 

நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்திற்காக இவர் பாடிய ’எங்கிருந்தாலும் வாழ்க’ என்ற இருவரை பலரது நினைவை விட்டு நீங்காத பாடல். மேலும் சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து உள்ளிட்ட பல பாடல்கள் பாடியுள்ளார்.

mn rajam husband actor al raghavan death for heart attack

கடந்த 1960 ஆம் ஆண்டு நடிகை எம்.என்.ராஜம் அவர்களை திருமணம் செய்து கொண்ட இவர், 60 வருடங்களாக ஒற்றுமையான தம்பதிகளாக வலம் வந்தனர். திரைப்பட பாடல்கள் மட்டும் இன்று ஏ.எல்.ராகவன் பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் காலமானதாக அவருடைய குடும்பத்தினர் தெரிந்ததை தொடர்ந்து, இவருக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சங்கம் சார்பாகவும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios