சினிமா வட்டாரங்களில் பார்ட்டி கலாச்சாரம் என்பது சர்வசாதாரணம். அதிலும் மும்பையில் பார்ட்டியின்றி எதுவும் அசையாது என்கிற அளவுக்கு எல்லாமே அங்கு அரங்கேறும். அப்படி நடந்த பார்ட்டி ஒன்றில் போதைப் பொருட்களை நடிகர் நடிகைகள் பயன்படுத்துகிறார்கள் என்று அரசியல்வாதி ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

பிரபல பாலிவுட் இயக்குநர்,  தயாரிப்பாளர்  கரண் ஜோஹர்  அவ்வப்போது அங்குள்ள நடிகர் நடிகைகளுக்கு பார்ட்டி கொடுப்பது வழக்கம். பார்ட்டி என்றால் மது இல்லாமல் இருக்குமா? ஆட்டம், பாட்டம், கூத்து, கும்மாளம் என போகும் தானே!.அப்படித்தான் கடந்த சனிக்கிழமை இரவு அவரது வீட்டில்  கொடுத்த பார்ட்டியில்,, ஷாஹித் கபூர், விக்கி கவுஷல், தீபிகா படுகோனே, மலாய்கா அரோரா, ரன்பிர்கபூர், அர்ஜுன்கபூர்,மிரராஜ்புட்கபூர், நடாஷாதலால்,ஜோயா அக்தர்,மிலிந் தியோராமனைவி பூஜா ஷெட்டி தியோரா,அயன்முகர்ஜி   ஆகிய பிரபலங்கள்  கலந்து கொண்டனர்.

உற்சாகத்தின் எல்லையில் திளைத்த பிரபலங்களை அப்படியே செல்போனில் வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார் கரண்ஜோஹர் .இங்கு தான் வினையே துவங்கியது. வருண் தவான் ,ஜோயா அக்தருடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பதும்,அவ்வீடியோவில் வெள்ளை நிற பவுடர் போன்ற ஓன்று சிதறி கிடந்ததும் . போதை மயக்கத்தில் விக்கி கவுசல் மூக்கை (போதை பவுடர் ஆசாமிகள் மூக்கை தேய்ப்பதை போல) தேய்க்கும் காட்சியும், தன் பக்கம் கேமிரா திரும்புவதை பார்த்தவுடன் எதையோ தனக்கு பின்னால் இயக்குனர் அயன் முகர்ஜி மறைக்கும் காட்சியும் பதிவாகியிருந்தது.

இணையதள ரசிகர்களிடையே வைரலான  அந்த வீடியோவை பார்த்த அகாலிதள எம்.எல்.ஏ. மஜிந்தர் சிங் சிர்சா, பாலிவுட் பிரபலங்கள் மது அல்ல, போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும்  தனது டுவிட்டரில் குற்றம் சாட்டியவர்,அதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை செய்யத் தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.இது மும்பை திரையுலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,இது குறித்துப் பேசிய  கரண் ஜோஹார்,’நாங்கள் ட்ரக் போதைப்பொருள்   பயன்படுத்தியிருந்தால் அதைநானே எப்படி  வீடியோவாக  எடுத்துவெளியிடுவேன் ?. வாரம் முழுவதும் வேலை செய்த நாங்கள், அன்று இரவு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்தோம். அவ்வளவு தான்.விளக்கின் வெளிச்சத்தை பவுடர் என்று நினைக்காதீர்கள். அப்படி ஏதாவது ஒன்றை  வீடியோ எடுத்து வெளியிட, நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்கிறார். அதைத்தொடர்ந்து பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர்,நடிகைகள் பலரும்,  எம்.எல்.ஏ. மஜிந்தர் சிங் சிர்சா கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஆனால்,நெட்டிசன்கள் பலரும் விளக்கின் ஒளிக்கும், பவுடருக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என பதிவிட்டுள்ளனர்.