நடிகர் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் இன்று வெளியான மிஸ்டர் லோக்கல், ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. 

ராஜேஷ்  இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள "மிஸ்டர் லோக்கல்" என்ற காமெடி படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் மன்னன் படத்தை தழுவி வந்துள்ளதாக பலரும் கூறி வந்த நிலையில், மனோகராக வரும் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் விற்னையாளராகவும், கீர்த்தனாவாக வரும் நயன்தாரா டிவி சீரியல் தயாரிப்பாளராகவும் நடித்துள்ளார்.  

படம் நல்லா இருக்காம், ஆனால் எதிர்பார்த்த அளவுவுக்கு இல்லையாம்,  ஆனால், நாயகியாக நயந்தாரா மன்னன் விஜய சாந்தியை போல மரண மாஸ் ஆக்டிங்கில் பட்டாஸு கிளப்பியிருக்கிறார். நகைச்சுவை என்ற பெயரில் ரோபோ ஷங்கர், சதீஷ் மரண மொக்க காமெடியை பண்ணி கடுப்பேத்தும் சம்பவமும் நடந்துள்ளது.

என்னதான் இருந்தாலும் சந்தனம் போல வருமா? சந்தானம் இல்லாம ராஜேஷ் எவ்வளவு பெரிய இழப்பு என்பதும், ஒரு இயக்குனருக்கு நடிகரின் பங்களிப்பு வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் என்பது ராஜேஷுக்கு சந்தனம் இல்லாதது போலத்தான் அமைந்துள்ளது.

இதுல அப்படியென்ன மொக்க என தியேட்டர் போய் பாருங்க, இல்லன்னா இப்படி ஒரு படமே வரலன்னு நெனச்சுக்கோங்க என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்வீட் போட்டுள்ளனர். அதுமட்டுமா, ரிமோட் இருந்தா மொத்த படத்தையும் ஒட்டி விட்டுருப்பேன். இதையெல்லாம் விட கொடுமை என்னன்னா? படத்தைப்பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் படம் முடியும் முன்பே தியேட்டரை விட்டு வெளியேறிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.