சமீபத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுக்ருதி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பல சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்தார்

அனுக்ருதியின் அடுத்த இலக்கு மிஸ் வேர்ல்ட் தானாம்...

வரும் டிசம்பர் மாதம் சீனாவில் நடைப்பெற உள்ள மிஸ் வேர்ல்ட் இல் கலந்துக்கொண்டு, என்னால் முடிந்த அனைத்து விதத்திலும் சிறப்பாக செயல்பட முற்படுவேன்...இப்போதைக்கு அது தான் என்னுடைய லட்சியம் என தெரிவித்து உள்ளார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், "இதுவரை உங்களுக்கு ஏராளமானோர் வாழ்த்து  தெரிவித்து இருப்பார்கள்..அதில் மறக்க முடியாத வாழ்த்து என்றால் எதை சொல்வீர்கள்..? 

நான் சிறுவயதில் இருக்கும் போது.. இது போன்ற ஆடையை உடுத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பார் என்னுடைய பாட்டி. ஆனால் இப்ப அவரே நான் மிஸ் இந்தியா வாங்கியவுடன் என்னை கட்டிப்பிடித்து அழுது வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

அதுதான் எனக்கு மாறாக முடியாத வாழ்த்து என அவர் குறிப்பிட்டு உள்ளார்