miskin avoid sai pallavi in his film
மிஷ்கின் இயக்க உள்ள அடுத்த படத்தில் நடிகை சாய் பல்லவி கண்டிஷன் போட்டதால் என் படத்திற்கு அவர் வேண்டாம் என மிஷ்கின் திட்டவட்டமாக கூறியுள்ளாராம்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு என அடுத்தடுத்த வெற்ற்ப்படங்களை இயக்கியவர் மிஷ்கின்.
கடைசியாக துப்பறிவாளன் படத்தை இயக்கினார். அப்படம் அவ்வளவாக வெற்றிபெறவில்லை. இந்நிலையில், அடுத்ததாக பாக்கியராஜ் மகனான நடிகர் சாந்தனுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இதில் ஒரு கதாநாயகியாக நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கதாநாயகியாக சாய்பல்லவியை கேட்டுள்ளார்களாம். அதற்கு சாய் பல்லவி கதையை கேட்காமலேயே சம்பளத்தை அதிகமாக கேட்டுள்ளார். மேலும் சாந்தனுவுடன் நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
இதனால் உடனே இயக்குனர் மிஷ்கின், சாய் பல்லவி என் படத்துக்கு வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டாராம். நடிகை சாய் பல்லவி கேரக்டரில் நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
