mishkin movie heroien annouced

பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், இயக்குனர் சுசீந்தரன், மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் 'சுட்டுப் பிடிக்க உத்தரவு'. இந்தப் படத்தை கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

க்ரைமை மையப்படுத்தி எடுக்க உள்ள இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் நடிகர்களைப் பற்றி மட்டும் அறிவித்திருந்த படக்குழுவினர் தற்போது இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளவர் பற்றி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, இந்தப் படத்தில் காதல் கண் கட்டுதே மற்றும் ஏமாலி ஆகிய படங்களில் நடித்துள்ள அதுல்யா நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில், மிஷ்கின் போலீஸ் அதிகாரியாகவும், இயக்குனர் சுசீந்திரன் செக்யூரிட்டியாகவும் நடிக்க உள்ளனர்.