வித்தியாசனாம கதைகளை மட்டுமே தேர்வு செய்து இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின். மேலும் சவரகத்தி, போன்ற சில படங்களில் சமீப காலமாக நடிக்கவும் துவங்கி உள்ளார்.

இவர் இயக்கத்தில், நடிகர் உதயநிதி நடித்து சமீபத்தில் வெளியான 'சைகோ' கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், முதலுக்கு மோசம் இல்லாமல் ஓடியது. மேலும் அனைவருடைய நடிப்பும் மக்களால் வெகுவாக பாராட்டபப்ட்டது.

இந்த படத்தை தொடர்ந்து, விஷால் கதாநாயகனாக நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற, 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து மிஷ்கின் இந்த துப்பறிவான் 2 படத்தில் இருந்து விலக உள்ளதாகவும், எனவே இந்த படத்தை நடிகர் விஷால் இயக்கி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து அதனை உறுதி செய்யும் வண்ணமாக போஸ்டர் ஒன்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொது மேடை ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின்,  விஷாலை எதிர்க்கும் தொனியில் ‘விஷால் உனக்கு இருக்கு ஆப்பு’ என்று கூறி மேடையை விட்டு இறங்கியதாக கூறப்படுகிறது. இவரின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களையே சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது.