misha goshal not accept the heroine role for ennai arinthaal

சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலக்கி கொண்டிருப்பவர், மிஷா கோஷல். இவர் 'நான் மகான் அல்ல' திரைப்படத்தில் அறிமுகம் ஆகி பல படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

மேலும் 'மூச்' என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடிவந்துள்ளது.

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா 'என்னை அறிந்தால்' படத்தில், திரிஷா நடிக்க இருந்த கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் மிஷா கோஷல் தானம். 

ஆனால், மிஷா கதையை கேட்ட போது இவருடைய கதாபாத்திரம் ஒரே பாடலில் முடிவடைவது போல மிகவும் சிறியதாக இருந்ததாம். அதனால் மிஷாவின் நண்பர்கள் இதுபோன்று சிறு கதாபாத்திரத்தில் நடித்தால் நாளை பெரிய வாய்ப்புகள் அமையாது என கூறியதால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.

அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து திரிஷாவிற்காக கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன்.

ஆனால் இப்போது ஏன் இந்த பட வாய்ப்பை விட்டோம் என அவ்வப்போது, நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் இதை புலம்பி வருகிறார் மிஷா.