பிரபல ஆர்.ஜே.வும் நடிகருமான, மிர்ச்சி சிவாவிற்கு இன்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து தங்களுடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மிர்ச்சி சிவா இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'சென்னை 600028' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'தமிழ்ப்படம்', ''கலகலப்பு', 'தில்லுமுல்லு', 'உள்பட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானார்.  

சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான, படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்நிலையில் சிவாவின் மனைவியும், பேட்மிட்டன் வீராங்கனையான பிரியா கர்ப்பமாக இருந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
மேலும் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக சிவாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.