இந்திய வீராங்கனை மீரா பாய் சானு முதல் பதக்கத்தை கைப்பற்றி ஆரம்பத்திலேயே அசத்தியுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டி நேற்று மிக பிரமாண்டமான முறையில் துவங்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில், இந்திய வீராங்கனை மீரா பாய் சானு முதல் பதக்கத்தை கைப்பற்றி ஆரம்பத்திலேயே அசத்தியுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மகளிருக்கான 49 கிலோ எடை பிரிவினருக்கான பளு தூக்குதல் போட்டியில்... இந்திய வீராங்கனை மீரா பாய் சானு வெள்ளி பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். சீன வீராங்கனை, ஹோ சி ஹாய் என்பவர் 210 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கத்தை வென்றார். இவரை விட 7 கிலோ குறைவாக தூங்கியதால் மீரா பாய் சானுவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
எனினும் ஆரம்பமே அசத்தலாக விளையாடி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள மீரா பாய் சானுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பிரபலங்கள் வாழ்த்து கூறி பதிவிட்ட, ட்விட்டர் பதிவுகள் இதோ...
