‘சர்கார்’ படத்துக்கு செய்யவேண்டிய செய்முறைகளை எல்லாம் முடித்த கையோடு, அஜீத் ரசிகர்கள் தவிர வேறெந்த ஜீவராசிகளும் பார்க்க முடியாத ‘பில்லா பாண்டி’ படத்தை ‘அடடா நல்லா இருக்கே’ என்று வியந்திருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. இதையொட்டி ‘என்னது படம் நல்லாருக்கா.என்னங்க சொல்றீங்க ?’ என்று மைல்ட் ஹார்ட் அட்டாக்குக்கு ஆளாகியிருக்கிறது அப்படக்குழு.

‘சர்கார்’ குறித்து சகல பஞ்சாயத்துகளும் க்ளைமாக்சுக்கு வந்துள்ள நிலையில் விஜய் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, 
... அவரது அரசியல் ஆசைகள் உள்ளுக்குள் இருந்து முதலமைச்சராவது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அவரது சினிமாத்துறையில், அதுவும் தன் படத்துக்கு எழுந்த விமர்சனத்துக்குக் கூட பதிலளிக்காதவர். இனி மாநிலத்தில் எழும் பிரச்சனைக்காக என்ன பேசிவிடப்போகிறார் என்று கேள்வி எழுப்புகிறார்,.

இவரது வசனங்கள் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினாலும் இனியாவது இந்த சந்தர்ப்பவாதம் பேசுகிற நடிகர்களின் உண்மைத் தன்மையும் அவர்களின் மார்க்கெட் பண்ணுகிற  உத்திகளையும் கண்டு மக்கள் தெளிய வேண்டும் என்றும் தெரிவித்த கடம்பூர் ராஜூ, இதே தீபாவளிக்கு வெளியான ‘பில்லா பாண்டி’யை பிரமாதம் என்கிறார்.

‘பில்லா பாண்டி’ படத்தில்எதார்த்தமான நடிப்பால் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது’ என்று சர்டிபிகேட்டும் தருகிறார் அமைச்சர்.