இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். ஸ்ரீபதி இயக்கும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.  முத்தையா முரளிதரனின் சாதனைகளை விளக்கும் விதமாக படம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. 

இதனிடையே முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பிறப்பால் தமிழராக இருந்தாலும் சிங்கள அரசுக்கும், சிங்களர்களுக்கும் ஆதரவாக செயல்பட்டு வரும் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் என ராமதாஸ், சீமான்,பாரதிராஜா உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, அண்ணாமலை உள்ளிட்ட சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

 

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷுடன் நடித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர்... இந்த புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வரும் இந்த விவகாரம் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  “கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘800’ படத்தில் நடிப்பது பற்றி நடிகர் விஜய் சேதுபதி யோசித்து பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த உணர்வளர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளார். திரைப்படத்தில் நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வுகளை புரிந்து கொள்வர் என்று நினைக்கிறேன்.புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு செயல்பட்டால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது” என பதிலளித்துள்ளார். 
a