minister jayakumar challenging meems creator

"ஆம்பளையா இருந்தா மீம்ஸ் இப்படி போடுங்க பார்க்கலாம்" அமைச்சர் ஜெயகுமார் பளார்...!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பெண் நிருபர் கன்னத்தில் தொட்டு பாராட்டு தெரிவிக்கிறார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனி மொழி ஆளுநரின் செய்கைக்கு அதிருப்தி தெரிவித்த நிலையில், இது குறித்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு பதிவிட்டுள்ளார்

அதில்,

Scroll to load tweet…

இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த சமயத்தில்,மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பெண்களை இது போன்று இழிவாக பேசுவதும், தவறாக விமர்சனம் செய்வதும் அழகில்லை..

நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின்அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 17, 2018

அதிலும் குறிப்பாக மீம்ஸ் மூலம் கேவலாக சித்தரிக்கும் நபர்கள்,மீம்ஸ் போடும் போது பெயர் மற்றும் மொபைல் எண்ணையும் சேர்த்து பதிவிட்டால் தான், அவர்கள் ஒரு ஆண்மகன் என என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.அதைவிட்டுவிட்டு பேடி போல கீழ்த்தரமா நடந்துக்கொள்ள உங்களுக்கு அசிங்கமா இல்லையா .? என அவருடைய கோபத்தையும், மனதில் தோன்றியதையும் தெரிவித்து உள்ளார். மேலும் பெண்கள் தானாக முன்வந்து புகார் கொடுத்தால் தான் இதற்காக நடவடிக்கை எடுக்க முடியும்.

பல பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும் என தெரிவித்து உள்ளார்.

சொல்லப் போனால் முழுக்க முழுக்க பெண்களுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் ஜெயகுமார் மீது பெண்களுக்கு தனி மரியாதை ஏற்பட்டு உள்ளது