Asianet News TamilAsianet News Tamil

‘ஜெயலலிதாவின் இயற்பெயரை வில்லி வேஷத்துக்கு வைத்தது காரணமா?’சர்கார்’ சடுகுடு


‘சர்கார்’ படத்தில் அப்பாவுக்கே விஷம் வைத்துக்கொல்லும் கொடூர வில்லி பாத்திரத்துக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்டியிருந்ததுதான் அமைச்சரின் கோபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றொரு பரபரப்பான தகவல் தற்போது தீயாய்ப் பரவ ஆரம்பித்துள்ளது.

minister fights against sarkar
Author
Chennai, First Published Nov 7, 2018, 3:02 PM IST


‘சர்கார்’ படத்தில் அப்பாவுக்கே விஷம் வைத்துக்கொல்லும் கொடூர வில்லி பாத்திரத்துக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்டியிருந்ததுதான் அமைச்சரின் கோபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றொரு பரபரப்பான தகவல் தற்போது தீயாய்ப் பரவ ஆரம்பித்துள்ளது.

சர்காரில் முதல்வர் பழ. கருப்பையாவின் மகளாக கோமளவள்ளி என்ற கொடூர வில்லி கதாபாத்திரத்தில் சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்திருந்தார். இந்த கோமளவள்ளி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயராகும். வரலட்சுமி,  ஜெயலலிதா போலவே கழுத்தில் நகை எதுவும் அணியாமல், கழுத்துவரை உடை அணிந்து வடிவமைக்கப்பட்டிருந்தார். minister fights against sarkar

படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் மீதும் மற்றும் சர்கார் குழுவினர் மீதும் இன்று மதியம் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜு, குறிப்பிட்ட விஷயங்கள் எதையும் கூறாமல் பொத்தாம் பொதுவாகத்தான் கூறியிருந்தார்.minister fights against sarkar

சற்றுமுன்னர், இந்த பஞ்சாயத்தில் தன்னையும் இணைத்துக்கொண்ட தனியரசு எம்.எல்.ஏ. ‘படத்தின் வில்லி கேரக்டருக்கு சூட்டப்பட்ட கோமளவள்ளி என்கிற பெயரை உடனே மாற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும்’ என்று புதிதாய் களம் இறங்கியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios