இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான “பாகுபலி” படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றவர் ராணா.  பல ஆண்டுகளாக முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, மே12ம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் போட்டோவுடன் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

 

இதனையடுத்து இருவீட்டாரும் சந்தித்து பேசக்கூடிய ரேகா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளை கெட்டப்பில் ராணாவும், பட்டுப்புடவையில் மிஹீகாவும் சும்மா தகதகவென ஜொலித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

 

 

இதையடுத்து 3 நாட்கள் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் ராணா திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 6ம் தேதி ராணா-  மிஹீகாவிற்கு சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக சோழிகள் மற்றும் பூக்களால் செய்யப்பட்ட ஆபரணம், அதற்கு ஏற்ற போல் மஞ்சள் நிற உடை என மங்களகரமாக தயாராகி இருந்தார் மிஹீகா. நேற்று பிங்க் நிற உடையில் அழகு தேவதையாய் ஜொலித்த மிஹீகாவின் மெகந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

 

இன்று ராணா - மிஹீகாவின் திருமணம்  ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் எளிமையாக நடந்து முடிந்தது. இந்த திருமணம் தெலுங்கு-மார்வாரி கலாச்சாரங்களின் ஒருங்கிணைப்பாக நடைபெற்ற திருமணத்தில் மிஹீகாவின் கரம் பற்றி, அக்னி சாட்சியாக இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தார் ராணா. 

 

 

கொரோனா காரணமாக இந்த திருமணத்தில் ராணா மற்றும் மிஹீகாவின் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 30 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளன. கட்டாய சமூக இடைவெளியுடன் எளிமையாக திருமணம் நடந்தேறியுள்ளது. திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் நடிகர்கள் நாக சைதன்யா, வெங்கடேஷ், அல்லு அர்ஜுன்  மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் பங்கேற்றனர். 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Actor @ranadaggubati taking Pheras (Wedding Vows) with his wife @miheeka at Ramanaidu Studios, Hyderabad... ☺️ Heartiest Congratulations to both of them and wishing them Happy and Blessed life ahead... ♥️ Miheeka's Outfit : @anamikakhanna.in Makeup : @makeupartisttamanna Follow 👉 @TheFabApp for more updates.. ✔️ . . . . . #bhallaladeva #bahubali #bahubali2 #celebritywedding #celeb #bollywood #facemask #bollywoodstar #bollywoodstylefile #bollywoodstyle #weddingvows #bollywoodactor #southindian #southindianwedding #miheekarana #ranadaggubati #miheekabajaj #weddingmakeup #bridaldress #redlehenga #lehenga #lehenga #weddingday #anamikakhanna #indianbride #indianwedding #weddingdecor #decorideas #TheFabApp #FabOccasions #FabLifestyle

A post shared by Fab Occasions ™ (The Fab App) (@thefabapp) on Aug 8, 2020 at 10:18am PDT