இதுவரை முரட்டு சிங்கிளாக இருந்து தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வந்த  மியா கலிஃபா, ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் மையல் கொண்டு  திருமணம் நிச்சயம் ஆன செய்தியை இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்துள்ளார்.

உலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மியா கலிஃபா, தனது நடிப்பு தொழிலை விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார். தொழிலை மாற்றினாலும் ரசிகர்களுக்கு கிளுகிளு போஸ்களோடு காட்சியளிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை.

இந்நிலையில், அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் திருமணம் நிச்சயம் ஆன செய்தியை நேற்று  இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 14-ம் தேதி ராபர் சாண்ட்பர்க், மியா கலிஃபாவிடம் தனது காதலை ஒரு மோதிரம் மூலம் புரபோஸ்  செய்ய, அவரும் உடனடியாக அவரது காதலை ஏற்றுக் கொண்டாராம். பின்னர், நிச்சயதார்த்த மோதிரத்தை உணவு பாத்திரத்தில் வைத்து கொடுத்து அசத்தியுள்ளார். லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமில் இடம் பெற்றுள்ள மியா மியாவின் அத்தனை புகைப்படங்களிலும் அந்த காதல் மோதிரம் மின்னுகிறது.