mgr movie pooja
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்’ படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதே போல் ஒரு படத்தை எம்.ஜி.ஆர் இயக்கி நடிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் கவனம் அரசியலின் மேல் திரும்பியதால் இவருடைய இந்தக் கனவு நிறைவேறாமல் போனது.

இந்நிலையில் இந்தப் படத்தை 'கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு' என்ற பெயரில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் காட்சிகள் முழுவதும் அனிமேஷன் முறையில் படமாக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் புகழ் பெற்ற அனிமேஷன் நிறுவனம் இந்தப் படத்தின் முழுப் பணிகளை ஏற்கவுள்ளது.
இந்தப் படத்தின் பூஜை எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று போடப்பட்டது, இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், கமலஹாசன் முன்னிலையில் விரைவில் உறுதியாக அரசியலுக்குள் வருவேன் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
