எம்ஜிஆர் இசையை பற்றி நன்கு அறிந்தவர். அவர் பெரிய மகான் அவருக்காக பாடியதை பாக்கியமாக கருதுவதாக பிரபல பாடகர் ஏசுதாஸ் ஒரு சமயம் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது பேட்டி இதோ...

கேள்வி: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 'உரிமை குரல்' படத்தில் அவருக்காக நீங்கள் பின்னணி பாடிய அனுபவம் பற்றி...

ஒருநாள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் என்னை அழைத்து (அதுவரை அவருக்கு பாடியவர் டிஎம். செளந்தரராஜன்) அவரின் 'உரிமைக்குரல்' படத்தில் 'விழியே கதை எழுது' என்கிற பாடலை பாடச் சொன்ன போது நான் அதிகளவில் சந்தோஷம் அடைந்தேன். 

உரிமைக்குரல் படத்தில் நான் அவருக்காக பாட போகிறேன் என்றவுடன் எனக்கு ஒரே சந்தோஷம். அப்பாடலை நான் பாட, மிகப்பிரபலமானது எனக்கு மேலும் சந்தோஷத்தை தந்தது.

எம்.ஜி.ஆர் ஒரு பெரிய மகான். அவர் என்னை அழைத்து பாட வைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமான சமாச்சாரம். அது என்னுடைய பாக்கியம் என்றே சொல்வேன். பின்னாளில் நான் அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்.

 இசைக்கு அவர் படத்தில் அதிகளவில் முக்கியம் கொடுத்தது மட்டுமல்லாமல், கலைக்கு அவர் கொடுத்த முக்கியம் மகத்தானது.