தனது அடுத்த படத்துக்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’என்று எம்ஜிஆர் பட டைட்டில் அடுத்த வாத்தியார் ஆக ஆசைப்பட்ட சிவகார்த்திகேயனின் ஆசையில் மண் விழுந்திருக்கிறது. அந்த டைட்டிலை யாருக்கும் தருவதாக இல்லை என சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

மிஸ்டர்.லோக்கல் படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் மித்ரன் இயக்கத்தில் ’ஹீரோ’, ’இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒருபடம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என ஒரே நேரத்தில்  4 படங்களை கையில் வைத்துள்ளார். இப்படி ஒரே நேரத்தில் சிகா 4 படங்களை வைத்துக்கொண்டு கால்ஷீட் சொதப்புவது இதுவே முதல் முறை.

இதில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் சிவகார்த்திகேயன் படத்துக்கு எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டுப்பிள்ளை’ பட டைட்டிலை வைக்க இருப்பதாகவும் அந்த டைட்டில் வாங்கப்பட்டு விட்டதாகவும்  தகவல்கள்வெளியாகின.இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்,தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் தனி அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  “எங்க வீட்டுப்பிள்ளை பட டைட்டில் உரிமையை இதுவரை வேறு நபர்களுக்கோ, அல்லது வேறு நிறுவனங்களுக்கோ வழங்கப்படவில்லை ” என்று கூறியுள்ளது.இதனால் சிவகார்த்திகேயன் படத்துக்கு எம்.ஜி.ஆர் பட டைட்டிலை வைப்பதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இதேபோல் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’ஹீரோ’ பட டைட்டிலில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.