புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், உட்பட பல பிரபலங்களுக்கு மேக்அப் மேனாக வேலை செய்து பிரபலமான செல்வராஜ் இன்று உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

இன்று மேக்அப் மேனாக இருந்து வரும் பலருக்கு முன்னோடியாக இருந்தவர் செல்வராஜ். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் துவங்கி, நடிகர் பாண்டியராஜன் வரை, பல பிரபலங்களிடம் பணியாற்றியுள்ளார். முகத்திற்கு ஏற்றவாறும், நடிகர்களின் நிறத்திற்கு ஏற்றவாறும் மேக்அப் போடும் திறமை உள்ளவர் என பாராட்ட பட்டவர் செல்வராஜ்.

இவரின் மேக்அப் திறமையை பார்த்து வியர்ந்து தன்கூடவே வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அப்படி என்றால் இவருடைய திறமையையும் தொழில் நேர்த்தியையும் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். கிட்ட தட்ட 50 ஆண்டுகளாக மேக்அப் மேனாக இருந்த இவர், கடந்த சில வருடங்களாக உடல் நல பிரச்சனை காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் அவதி பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். இவருடைய மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.