எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல பழம்பெரும் நடிகருடன் நடித்த நடிகை குசலகுமாரி உடல்நலக்குறைவால் கலாமானார். 

எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல பழம்பெரும் நடிகருடன் நடித்த நடிகை குசலகுமாரி உடல்நலக்குறைவால் கலாமானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியான 'கூண்டுக்கிளி' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பழம்பெரும் நடிகை T .D .குசலகுமாரி. 

இந்த படத்தை தொடர்ந்து, மன்மத லீலை, பராசக்தி, கொஞ்சும் சலங்கை, போன மச்சான் திரும்பி வந்தான், அரிச்சந்திரா உள்பட ஏராளமான படங்களில் நடித்தது மற்றும் இன்றி 250 திற்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியுள்ளார்.

திரைப்பட வாய்ப்பு, நடனம் என பிஸியாகவே இருந்ததால், கடைசிவரை திருமணமும் செய்துகொள்ளவில்லை. தற்போது 83 வயதாகும் இவர் இவரின் கூட பிறந்த சகோதரர் சுந்தரம் குடும்பத்தோடு வாழ்ந்துவந்தார்.

கடந்த சில ஆண்டுகளாவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை காலமானார். இவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.