meyatha maan audio launch
முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கும் “மேயாத மான்” திரைப்படம் வட சென்னை பின்னணியில் நடக்கும் காதல் கதை.
இத்திரைப்படத்தில் வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க ரத்ன குமார் இயக்கியுள்ளார். முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரபல திரைப்பாடகர் பிரதீப் குமார் இணைந்து இசையமைகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து விவேக் வேல்முருகன் வரிகளில் அந்தோணி தாசன் பாடிய “தங்கச்சி பாடல்" முதலில் வெளியிடப்பட்டது. இரண்டாவதாக பிரதீப் குமார் எழுதி பாடி இசையமைத்த “என்ன நான் செய்வேன்" பாடல் வெளியிடப்பட்டது. மூன்றாவதாக விவேக் வேல்முருகன் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடிய “அடியே எஸ்.மது" பாடல் வெளியிடப்பட்டது. இம்மூன்று பாடல்களும் மக்கள் மத்தியிலும் இணையதளங்களிலும் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து பெற்று வருகின்றன.
இதனை அடுத்து இப்படத்தின் முழுப் பாடல் ஆல்பத்தையும் லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களின் “Ovations” நிகழ்ச்சியில் வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.
