Asianet News TamilAsianet News Tamil

வலிமை பாக்குறப்போ இது நம்ம படமாச்சேனு தோணுச்சு... அப்படியே காப்பி அடிச்சு வச்சிருக்காங்க - மெட்ரோ தயாரிப்பாளர்

Valimai vs Metro :  வழக்கு முடியும் வரை வலிமை படத்தை ஓடிடி-யில் வெளியிட தடைவிதிக்க கோரியும் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக மெட்ரோ பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

Metro producer says 100 percent copyright violation in valimai story
Author
Tamil Nadu, First Published Mar 13, 2022, 11:36 AM IST

வலிமை வசூல்

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான படம் வலிமை. போனி கபூர் தயாரித்திருந்த இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. வெளியான பத்தே நாளில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

கதை திருட்டு சர்ச்சை

வலிமை திரைப்படம் சமீபத்தில் கதைத்திருட்டு சர்ச்சையில் சிக்கியது. ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான மெட்ரோ படத்தை அப்படியே காப்பி அடித்து வலிமை படம் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்த தகவல் மெட்ரோ படத்தின் தயாரிப்பாளரின் காதுக்கு செல்ல அவரும் படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி வலிமைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

Metro producer says 100 percent copyright violation in valimai story

மெட்ரோ பட தயாரிப்பாளர் விளக்கம்

இந்நிலையில், இதுகுறித்து மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜே.ஜெயகிருஷ்ணன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “வலிமை படம் ரிலீசாகும் வரை அப்படத்தின் கதை யாருக்கும் தெரியாது. அதனை படக்குழு சீக்ரெட்டாக வைத்திருந்தது. ஆனால் படம் வெளியான முதல் நாள் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனுக்கு ‘மெட்ரோ படத்த அப்படியே காப்பி அடிச்சு வச்சிருக்காங்க’னு நிறைய கால்களும், மெசேஜ்களும் வந்துள்ளன.

வலிமை பார்த்து ஷாக் ஆயிட்டேன்

அதில் சில மெசேஜ்களை அவர் எனக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து மறுநாள் நான் வலிமை படத்தை பார்க்க சென்றேன். என்னுடைய மகன் அஜித்தின் தீவிர ரசிகன் அவனையும் என்னுடன் அழைத்து சென்றேன். படம் பார்க்கும்போது என்னுடைய மெட்ரோ படத்தை பார்க்குற மாதிரியே இருந்துச்சு. நிறைய விமர்சனங்களும் இரு படங்களுக்கு உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி இருந்தன.

Metro producer says 100 percent copyright violation in valimai story

100 சதவீதம் காப்பி

இதையடுத்து இதுதொடர்பாக வக்கீலை சந்தித்து அவரையும் படத்தை பார்க்க சொன்னேன். படம் பார்த்த பின்னர் இது 100 சதவீதம் காப்பி தான் என சொன்னார்கள். இதையடுத்து தான் வலிமை படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு முடியும் வரை வலிமை படத்தை ஓடிடி-யில் வெளியிட தடைவிதிக்க கோரியும் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக மெட்ரோ பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... நயனுக்கும், விக்கிக்கும் கல்யாணமே முடிஞ்சிருச்சா?... என்ன சொல்லவே இல்ல!! - போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios