கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'மெட்ரோ' இந்த படத்தில் உண்மையான ரௌடிகள் மற்றும் பிட்பாக்கெட் நபர்களை வைத்து இயக்கி தயாரித்திருந்தவர் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா.

தற்போது நடிகர் அசோக் செல்வனை வைத்து பெயரிடாத படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கும் சென்னையை சேர்ந்த பிசினஸ் அனலிசிஸ்ட் ஸ்ரீலோகா என்பவருக்கும்  மதுரை அருகே உள்ள சொக்கி குளத்தில் திருமணம் நடைபெற்றது.  இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர்

நேற்று இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.