தன்னை யாரும் பொருட்படுத்தாவிட்டாலும், வாண்டட் ஆக வண்டியில் ஏறும் வடிவேலு ஸ்டைலில்,  MeToo' பஞ்சாயத்தில் தன் பெயரும் தவறாமல் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்கிறார் ரிடையர்ட் நடிகை கஸ்தூரி.

MeToo' பதிவுகள் போடும்போது பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும். சும்மா கற்பனையாக எதையாவது பதிவிட்டு இந்த இயக்கத்தை வலுவிலக்க வைக்காதீர்கள்’ என்கிற நியாயமான கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் சில நடிகைகள் குறிப்பிட்ட ஆசாமிகள் யார் பெயரையும் பொருட்படுத்தாமல் போகிறபோக்கில் சில பதிவுகளைப் போட்டு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தப்பட்டியலில் நடிகை கஸ்தூரிக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

 

கடந்த சில தினங்களாகவே MeToo' பதிவுகள் சிலவற்றை பூடகமாக வெளியிட்டுவரும் கஸ்தூரி இதுவரை உருப்படியாக ஒருவர் பெயரையும் சொன்னதில்லை. அதன் தொடர்ச்சியாக இன்றும் பரபரப்பு கிளப்புகிறேன் பேர்வழி என்று ‘ஏற்கனவே என்னிடம் செருப்படி வாங்கிவிட்டு எதுவுமே நடக்காதமாதிரி மழுப்புற சிலர்...இறந்துவிட்ட ஒருவர்...இழுத்துக்கொண்டு  இருக்கிற ஒருவர்...இவங்களைப் பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு...’ என்று ட்விட்டியிருக்கிறார். 

ஒரு சின்ன யூகத்துக்கும் இடம் தராமல் ஊருமில்லாமல், பேருமில்லாமல் இப்படி வெளியிடும் செய்திகளால் என்னதான் சொல்லவருது இந்தக் கிறுக்குப் பயபுள்ள கஸ்தூரி? சம்பவம் பண்ண நெனச்சவனை ஸ்பாட்லயே செருப்பால அடிச்ச அந்த கஸ்தூரி இப்ப எங்க? எங்க?? எங்க???