இனிமேல் என் வீட்டுக்குள் பெண்கள் நுழையக்கூடாதுன்னு போர்டு மாட்டலாமான்னு யோசிச்சிட்டுருக்கேன்’ என்கிறார் ’மி டு’ சர்ச்சையில் மேலும் ஒருவராய் சிக்கிய நடிகர் ராதாரவி. 

நடைமுறைச்சிக்கல் எதைபத்தியும் யோசிக்காம போறபோக்குல ஆண்கள் மேல குற்றம் சொல்றது இப்ப சகஜமாயிடுச்சி.சொந்தக் காரணங்களுக்காக `மீ டூ'வை யூஸ் பண்ணாதீங்க. முதல்ல சினிமா பற்றிப் புரிஞ்சுக்கங்க. ஒரு நடிகை ஸ்டன்ட், டான்ஸ் சீனில் நடிக்கிறப்போ மாஸ்டரின் கை அவங்க மேலே படாமல் எப்படி இருக்கும்? சினிமா துறையில் இந்த மாதிரி நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருக்கு.

 ஒரு மேக்கப் மேன். கலர் குறைச்சலாக இருக்கும் கதாநாயகிகளுக்கு உடம்பு முழுக்க பான்கேக் ஸ்டிக் போடுவாங்க. அப்போ, மேக்கப் மேனின் கைகள் படத்தான் செய்யும். இது தப்பா? ஒரு ஹீரோயினை என் படத்தில் நடிக்கிறதுக்காக புக் பண்றேன். அவங்க வீட்டுக்கு போய்தான் கதையைச் சொல்லணும். அவங்க என் மேலே ஏதாவது புகார் சொல்லிட்டா என்ன ஆகறதுன்னு பயந்துட்டு, வீட்டின் கார் பார்க்கிங்கில் வெச்சா கதை சொல்லமுடியும்? 30 நாள் அவுட்டோர் ஷூட்டிங்னு போவோம். 

ஹீரோ, ஹீரோயின், வில்லன், டைரக்டர், தயாரிப்பாளர், மேக்கப் மேன், டச்சப், சமையல்காரம்மா என எல்லோருமே ஒரே குடும்பமா இருப்போம். அப்போ, இலை மறை காய் மறையா எவ்வளவோ தவறுகள் நடந்திருக்கு. பரஸ்பரம் சம்மதம் இல்லைன்னா தப்புகள் நடக்காது. அந்த வித்தியாசத்தை நீங்க புரிஞ்சுக்கணும். அதுக்காக, மொத்த சினிமாவையும் கொச்சைப்படுத்தினா எப்படி? என்கிறார் ராதாரவி.