சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கஸ்தூரி மிக முக்கியமானவர். திரைப்படங்களில் இவரை அதிகம் பார்க்கமுடியவில்லை என்றாலும் சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி பேட்டிகளிலும் இவரை அதிகம் பார்க்கலாம். சர்ச்சையான விஷயங்களில் தில்லாக கருத்துக்கள் சொல்வதிலாகட்டும், நோஸ் கட்டாகும் அளவிற்கு பதிலடி கொடுப்பதிலாகட்டும் இவருக்கு நிகர் இவரே தான். 

 
சமீபத்தில் சென்சேஷனலாக போய்க்கொண்டிருக்கும் ”மீ டூ” இயக்கத்தில் பெரும்பாலான பெண் பிரபலங்களும் தங்கள் திரையுலக வாழ்க்கையில், சந்தித்த பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து வெளிப்படையாக கூறிவருகின்றனர். இந்த மீ டூ”வில் நீங்கள் ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை என்று கஸ்தூரியிடம்  டிவிட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார் ஒரு நபர். 

அதில் ” கஸ்தூரி மேடம் நீங்களும் பல தடவை சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கும் நடிக்கும் போது பாலியல் தொந்தரவு இருந்தது என்று. ஏன் அதை பற்றி நீங்கள் விளக்கமாக சொல்ல வில்லை. அது யாரென்று ஏன் சொல்ல தயங்குகிறீர்கள்.” என கேள்வி எழுப்பி இருக்கும் அந்த நபருக்கு கஸ்தூரி தன் வழக்கமான ஸ்டைலில் பதிலளித்திருக்கிறார். 

தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்கிட்டே செருப்படி வாங்கிட்டு இன்னிக்கு வரை பொது இடத்துல என்னை பாக்கும் போதெல்லாம் எதுவுமே நடக்காதமாதிரி மழுப்பற சிலர். இறந்துவிட்ட ஒருவர், இழுத்துக்கொண்டு ஒருவர். இவங்களை பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு.” என கஸ்தூரி அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரியின் பரிதாபத்துக்கு ஆளான அந்த பிரபலங்கள் யார் என்பது தான் தெரியவில்லை.