நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனது பப்ளிசிட்டிக்காகவே தனது தந்தை அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறியிருப்பதாக நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார். நிபுணன் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தன்னிடம் வரம்பு மீறியதாக நடிகை ஸ்ருதி கூறியிருந்தார். நெருக்கமான காட்சியின் படப்பிடிப்பின் போது காட்சியிலேயே இல்லாத வகையில் தனது பின்னழகை நடிகர் அர்ஜூன் தடவியதாகவும் இதனால் தனக்கு தர்மசங்கடமான சூழல் உருவானதாகவும் ஸ்ருதி தெரிவித்திருந்தார். 

மேலும் கண்ட இடங்களில் தொடுவதற்கு தான் அனுமதிக்காத காரணத்தினால் அர்ஜுன் தனக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் ஸ்ருதி தெரிவித்திருந்தார். நடிகர் அர்ஜூன் மீதான குற்றச்சாட்டு குறித்து அவரது மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் ஐஸ்வர்யா கூறியிருப்பதாவது, சினிமா துறையில் நான் எந்தவிதமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவில்லை. வலுக்கட்டாயமாகவும், ஒருவரின் விருப்பத்திற்கு மாறாகவும் பலவந்தப்படுத்துவதை தான் மீ டூவில் வெளிப்படுத்த வேண்டும்.

 

படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சம்பவங்களை எப்படி பாலியல் குற்றச்சாட்டாக்கலாம்? ஸ்ருதி ஹரிஹரன் போன்ற சிலர் மீ டூ வை தங்களின் சொந்த பலன்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனக்கு தெரிந்து பப்ளிசிட்டிக்கு தான் ஸ்ருதி இவ்வாறு நடந்து கொள்கிறார்.

அனைத்து மொழிகளிலும் பிரபலமாக உள்ள ஒரு நடிகரை புகார் கூறியதும் அனைத்து மாநில சேனல்களிலும் ஸ்ருதி பெயர் செய்தியாகிறது. இதனை எதிர்பார்த்தே ஸ்ருதி என் தந்தை மீது புகார் கூறியிருக்க வேண்டும். இவ்வாறு அந்த பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார்.