Nagabandham Title Glimpse: மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகளுடன் வெளியான 'நாகபந்தம்' டைட்டில் கிலிம்ஸி!

அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டுடியோவுடன் இணைந்து, அபிஷேக் நாமா இயக்கத்தில்  "நாகபந்தம்", பான் இந்தியத் திரைப்படத்தை உருவாக்குகிறது. இதன் டைட்டில் கிலிம்ஸி வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
 

Mesmerizing Nagabandham Title Glimpse out mma

கூத்தாச்சாரி மற்றும் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் & விநியோகஸ்தர் அபிஷேக் நாமாவுக்கு சிறப்பு அறிமுகம் தேவையில்லை. தற்போது இவர் சினிமா அனுபவத்தை மாற்றி அமைக்கும் ஒரு அற்புதமான காவியத்தைத்  தயாரிக்கிறார். அபிஷேக் பிக்சர்ஸ் "புரொடக்சன் 9" ஆக உருவாகும் இப்படத்தை, தண்டர் ஸ்டுடியோஸ் சார்பில் மதுசூதன் ராவ் இணைந்து  தயாரிக்கிறார்.

இயக்குநராக டெவில் மூலம் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்த அபிஷேக் நாமா இந்த பிரம்மாண்டமான படத்தில் ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தவுள்ளார். அபிஷேக் நாமா, ஆன்மீக மற்றும் சாகசங்கள் நிறைந்த ஒரு அற்புதமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார். தேவன்ஷ் நாமா இப்படத்தை வழங்குகிறார், தேவ் பாபு காந்தி (புஜ்ஜி) இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

சௌந்தரபாண்டியை அந்தரத்தில் தொங்க விட்ட ஷண்முகம்! முத்துப்பாண்டி செய்யும் அடுத்த சதி - அண்ணா சீரியல் அப்டேட்!

உகாதியின் புனிதமான திருநாளில், அபிஷேக் பிக்சர்ஸ் அவர்களின் பிரம்மாண்டமான முயற்சியின் தலைப்பை ஒரு அற்புதமான வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்திற்கு நாகபந்தம் - தி சீக்ரெட் ட்ரெஷர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது - . வியக்க வைக்கும் அறிமுக வீடியோ நம்மை மயக்கும் ஒரு மந்திர உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது, மேலும் வசீகரிக்கும் ஒலிப்பதிவு மற்றும் கண்கவர் காட்சிகள் என அத்தனை அம்சங்களும் வியக்கவைக்கிறது.  இதன்  விஎஃப்எக்ஸ் பணிகள் மிகச்சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் புகழ் அவினாஷ் நடிப்பில்,  மர்மமான அகோரி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் இந்த வீடியோ ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. இது உண்மையில்  நமது ஆர்வத்தைத் தூண்டுவதோடு விஷ்ணுவின் புதையலுக்கான பரபரப்பான தேடலையும் காட்டுகிறது.  இயக்குநர் அபிஷேக் நாமா மற்றும் தயாரிப்பாளர் மதுசூதன் ராவ் தலைமையில், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு பணியாற்றுவதால், இந்த மிகப்பிரம்மாண்ட திரைப்படம், கண்டிப்பாக மாயாஜாலம், மர்மம் மற்றும் சாகச உலகில் மூழ்கும் அட்டகாசமான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

Karthigai Deepam: உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி! அம்மாவை காப்பாறுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபம் அப்டேட்!

இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் S லென்ஸ்மேனாகவும், அபே இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். காந்தி நதிகுடிகார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். நாகபந்தம் ஒரு பான் இந்தியா திரைப்படமாகும், இது 2025 ஆம் ஆண்டில், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும். முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios