Mersel budget is released
மெர்சல் படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று இதுவரை உறுதி செய்யப்படாத தகவல்கள்தான் வெளியாகிக் கொண்டிருந்தன. தற்போது அப்படத்தின் பட்ஜெட் 135 கோடி என அதிகாரபூர்வமான தகவல் வந்துள்ளது.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.
விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் மெர்சல் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. இன்னொரு பக்கம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளைத் துவங்கியுள்ளார்.
இதனிடையில் மெர்சல் படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை ATMUS மற்றும் US Tamil LLC ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து வாங்கி இருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் “மெர்சல் படம் 135 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விவேகம் படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடியில் உருவானது. அதைவிட 50 கோடி அதிக பட்ஜெட்டில் மெர்சல் உருவாகி இருக்கிறது.
