mersal will be Broke flop sentiments

அப்பாடா ஒருவழியாக மெர்சலுக்கு வந்த எல்லா பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்து முடித்து வைத்தது விலங்குகள் நல வாரியம். விஜயின் மிரட்டலான நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மெர்சல்’ திரைப்படம் நாளைய மறுநாள் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு 
எக்கச்சக்கமாய் கூடிக்கொண்டே போகிறது. 

முதன்முதலாக விஜய் மூன்று வேடங்களில் தோன்றுகிறார் என்பதைத் தாண்டி, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு என எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மேட்டரை உள்ளே வைத்துள்ளார் அட்லீ.

‘மெர்சல்’ திரைப்படம் ரஜினியின் ‘மூன்று முகம்’, விஜயகாந்தின் 
கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுவது உண்மையா? இல்லைனாலும் கூட, கண்டிப்பாக தந்தையின் மரணத்திற்காக பழி வாங்கும் ‘ரிவெஞ்ச்’ எடுக்கும் கதையாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.

பல மறக்கமுடியாத ஃபிளாஷ்பேக் எபிசோட்கள், ரொம்பவே வலுவான எமோஷனல் காட்சிகள் மற்றும் அதிரவைக்கும் திருப்பங்களைக் கொண்ட எத்தனையோ திரைக்கதைகளை எழுதிய இந்திய சினிமாவின் அதி மேதாவி விஜயேந்திர பிரசாத் எழுத்தில் உருவாகிறது என்பதே இப்படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். இவர் ‘விக்ரமார்குடு’ ‘நான் ஈ’, ‘மகதீரா’, ‘பாகுபலி 1 & 2’ என எத்தனையோ மெகா ஹிட் திரைப்படங்களுக்கும், பாலிவுட் பிளாக்பஸ்டரான சல்மான் கானின் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்திற்கும் கதை திரைக்கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், ‘மெர்சல்’ திரைப்படத்திலும் விஜய் ரசிகர்களை மெர்சலாக்க ஃபிளாஷ்பேக் எபிசோட்கள், ரொம்பவே வலுவான எமோஷனல் காட்சிகள் என பல விஷயங்கள் வைத்திருப்பார். இதை உறுதிப்படுத்துவதைப் போல போஸ்டர்களையும், டீசரையும் பார்த்தாலே தெரிகிறது. 25 ஆண்டுகளாக ‘இளைய தளபதி’ என அழைக்கப்பட்ட விஜய் டைட்டில் பெயரை ‘தளபதி’ விஜய் என மாற்றிய அட்டகாசமான ஐடியாவில் தொடங்கி, ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் வரிகள் மற்றும் ‘ரசிகனே தலைவன்’ என்கிற வரிகளைக் கொண்ட போனஸ் டிராக் உட்பட ‘மெர்சல்’ படம் முழுக்க விஜய் ரசிகர்களுக்காக ஒரு பெரிய விருந்தே காத்திருக்கிறது.

இதுமட்டுமல்ல, இப்படத்தில் வரும் அப்பா விஜய் கதாபாத்திரத்தின் பெயரே ‘தளபதி’ தான் என்றும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, நடிகர் விஜய்யின் ‘ஃபிளாப் சென்டிமெண்ட்’ ஒன்றையும் ‘மெர்சல்’ படத்தின் வெற்றி மூலம் உடைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அட்லீயிடம் இருக்கிறது. 

அது என்னன்னு தெரிஞ்சிக்கணுமா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடித்தால் படம் ஓடாது அப்படி பிளாப் ஆன படம் தான் உதயா. அழகிய தமிழ்மகன், அதுமட்டுமல்ல தன் குடும்பத்திற்காக பழிவாங்கும் கதைகளில் விஜய் நடிக்கும் படங்கள் ஓடாது அந்த படங்கள் தான் ஆதி, வில்லு, புலி என்றும் நீண்ட நாட்களாய் விஜய் கேரியரில் இருக்கும் இந்த நெகட்டிவ் செண்டிமெண்ட்... இதையெல்லாம் தகர்த்தெறிந்து தடம் பாதிக்குமா மெர்சல்