mersal update in karnataka
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், விஜய்யின் ட்ரிபிள் ஆக்சன் நடிப்பில் வெளியாகிய 'மெர்சல்' திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது.
மேலும் மெர்சல் படத்தின் கன்னட மொழி உரிமையை கர்நாடகாவில் ஹாரிஸன் ஸ்டூடியோஸ் வாங்கியுள்ளது அதே போல் விநியோக உரிமையையும் அதே நிறுவனமே பெற்றது. இந்நிலையில் கர்நாடகாவில் மெர்சல் திரைப்படத்தின் வசூல் சாதனை வெளியாகியுள்ளது. இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம். 'மெர்சல்' தான் என கூறப்படுகிறது.
கர்நாடக தியேட்டர் உரிமை 6 கோடிக்கு வாங்கப்பட்டிருந்த நிலையில் 2 வார முடிவில் ரூ. 12.25 கோடி வசூலித்திருக்கிறது என்று கூறியுள்ளார்
பட விநியோகஸ்தர் டோனி. ஏற்கனவே ரஜினியின் கபாலி படம் கர்நாடகாவில் ரூ. 15.5 கோடி வரை வசூலித்து முதல் இடத்தில் இருக்கிறது. விரைவில் கபாலி பட சாதனையை விஜய்யின் மெர்சல் படம் முறியடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் கர்நாடகாவில் வெளியான விஜய்யின் தெறி படம் ரூ. 7 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
