mersal thelugu release update

அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து தீபாவளி தினத்தன்று வெளியாகி ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த திரைப்படம் மெர்சல். 

வெளியாவதற்கு முன்பே விலங்கு நல வாரியம் மற்றும் சென்சார் சான்றிதழ் என பல பிரச்சனைகளை சந்தித்த இந்த படம். வெளியான பிறகும் பாஜகவினரால் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி பற்றிய வசனங்களுக்கு எதிர்ப்புகளை சந்தித்தது.

ஒரு வழியாக அனைத்து பிரச்னைகளில் இருந்தும் மீண்டு தற்போது வரை பல திரையரங்கங்களில் 'மெர்சல்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் இன்று ஆந்திராவில் தெலுங்கில் மெர்சல் திரைப்பம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து வந்த தகவலின் படி தெலுங்கிலும் மெர்சல் திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாகவும். முக்கியமாக விஜய் பேசும் ஜி.எஸ்.டி வசனத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.