mersal teaser got 3 lakhs Likes 52 thousand dislikes

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சிங்கிள் டிராக், இசை வெளியீட்டைத் தொடர்ந்து அட்லி பிறந்தநாளை முன்னிட்டு மெர்சல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த டீசரில் அப்பா விஜய், மேஜிக் மேன் விஜய், மருத்துவர் விஜய் அனைவரும் இடம் பெற்றுள்ளனர்.

அதோடு நீ பற்ற வைத்த நெருப்பெல்லாம், பற்றி எறிய உன்னை கேட்கும்,

நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் - என்று பழமொழி பேசும் விதமாக இந்த டீசர் அமைந்துள்ளது.

இந்த நிலையில், வெளியான அரை மணி நேரத்தில் 2 இலட்சத்து 90 ஆயிரம் லைக்குகளையும், 52 ஆயிரம் டிஸ்லைக்குகளையும் பெற்றுவிட்டது.

மேலும், 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

அதோடு 7.6 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர் என்பது கொசுறு தகவல்.