mersal release in Telugu today

தீபாவளி அன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் இன்றுடன் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை முடிக்கிறது. இந்த 20 நாட்களில் சுமார் 240 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளது.

தமிழ்நாட்டில் 'எந்திரன்' படத்தின் வசூலைக் கடந்த 'மெர்சல்' படம் வெளிநாடுகளிலும் சாதனை வசூலை படைத்து அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

தமிழில் வெளியாகும் அன்றே இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி' படம் வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கை வாங்க வேண்டியதில் காலதாமதம் ஏற்பட்டதால் பட வெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டது படக்குழு.

கடந்த வாரம்தான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. அதன்பின் நவம்பர் 9-ஆம் தேதி (அதாவது இன்று) படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார் 400 திரையரங்குகள் வரை இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் எத்தனை கோடி வசூலாகிறது என்பதைப் பொறுத்து தென்னிந்திய படங்களின் வசூலில் சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது.