mersal promotion in andhra
அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து ஒரு வழியாக படம் வரும் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.
மேலும் அதிக திரையரங்குகளில் ரிலீசாகும் படம் என்கிற சாதனையையும் மெர்சல் நிகழ்த்தும் என்று கூறப்படுகிறது
மெர்சல் படத்தை தமிழ், மலையாளம் மட்டும் இன்றி தெலுங்கிலும் மிகப்பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம் படக்குழுவினர்.
இதனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் மெர்சல் பேனர், போஸ்ட்டர்கள் மிக பெரிய அளவில் வைத்து மிரட்டி வருகின்றனர்.

அதே போல் நேரடி தெலுங்குப்படம் போல இப்படத்திற்கு ப்ரோமோஷன் இருக்க, கண்டிப்பாக தெலுங்கிலும் மெர்சல் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே நடிகர் விஜய்க்கு மலையாளத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்க, இந்த படம் மூலம் தெலுங்கிலும் ரசிகர்கள் உருவாகி விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
