mersal problem nithin sathya open talk
நிவின் சத்யா தற்போது நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். இந்நிலையில் தற்போது, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மெர்சல் படத்திற்கு வரும் பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், அனைத்து படங்களுக்கும், எடுக்கும் போது எந்தப் பிரச்னையும் வருவதில்லை ஆனால் ரிலீஸ் என்று அறிவித்து விட்டால் மட்டும் பல பிரச்சனைகள் வந்துவிடுகின்றன. ஆனால் தற்போது உருவாகியுள்ள மெர்சல் மிகவும் பிரமாண்டமான சூப்பர் திரைப்படமாக தயாராகியுள்ளது. கண்டிப்பாக இந்தப் படம் வெற்றிப் படமாக அமையும். மேலும் இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் ஹேமா மற்றும் படக்குழுவினர் தங்களுடைய உழைப்பை போட்டுள்ளனர்.
ஆனால் வெளியிடுவதில் சிறு அரசியல் தடைகள் தற்போது அவர்களுக்கு உருவாகியுள்ளது. எத்தனை பிரச்சனை வந்தாலும் மெர்சல் கண்டிப்பாக வெளிவரும், சூப் டூப்பர் ஹிட் ஆகும் என தெரிவித்துள்ளார்.
