mersal movie no release in kasi theatre
ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆரவாரத்தோடு படத்தைப் பார்க்க பெரிதும் விரும்பும் திரையரங்கங்களில் ஒன்றுதான் காசி தியேட்டர் . பெரிய ஹீரோக்களின் படங்கள் வருகிறது என்றால் கண்டிப்பாக அன்று அசோக் பில்லர் செல்லும் வழியில் ட்ராபிக் கடுமையாகவே இருக்கும்.
இதன்காரணமாக ரசிகர்களை கட்டுப்படுத்த, போலீஸ் பாதுகாப்பும் போடப்படும். தற்போது காசி திரையரங்கம் முன்பு, விஜய் ரசிகர்கள் கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்ய காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம்தான்.
திடீரென காசி திரையரங்க நிர்வாகம், ஒரு சில காரணங்களால் படத்தை தங்களது தியேட்டரில் திரையிட முடியவில்லை எனக் கூறி ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. இதே போல் திருப்பூரில் உள்ள சக்தி திரையரங்கில் படத்தை திரையிட முடியாது எனக் கூறியுள்ளது நிர்வாகம். இதனால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
