mersal in first place
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வரும் 1௦௦ ஆவது திரைப்படம் மெர்சல்.மெர்சல் என்றாலே மெர்சலாகி போகும் அளவிற்கு சும்மா தெறிக்க விடுகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
இந்த படத்திலிருந்து “ஆளப்போறான் தமிழன் “என்ற பாடல் சென்ற வாராம் வெளியான முதலே, சமூக வலைத்தளங்களில் பட்டயகிளப்பி விட்டனர் விஜய் ரசிகர்கள்.
கூகுளில் முதல் இடத்தை பிடித்த மெர்சல்
விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த மெர்சல் திரைப்படத்தின் தேடல் தான் சென்ற வார கூகிள் சர்ச்சில் முதலிடம் பிடித்துள்ளது என கூகிள் இந்தியா அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் மெர்சல் படத்திற்காக மெர்சலாகி காத்திருகின்றனர் விஜய் ரசிகர்கள்
