இயக்குனர் அட்லி இயக்கத்தில், மிகப்பெரிய சர்ச்சைக்கு இடையே வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'மெர்சல்'. 

மூன்று வேடங்களில் விஜய் நடித்து பட்டையை கிளப்பிய இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியானதில் இருந்து, அடுக்கடுக்காக ஒவ்வொரு சாதனைகளை படைத்தது வருவதாக பட்டியல்கள் வெளியாகி வரும் நிலையில் வித்தியாசமான ஒரு சாதனையையும் 'மெர்சல்' திரைப்படம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது என்ன தெரியுமா...?  'டுவிட்டரில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்காக மெர்சல் இடம்பெற்றுள்ளதாம்' . 

இந்த தகவலை சென்னையில் நடந்த வணக்கம் டுவிட்டர் நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான டுவிட்டர் அமைப்பின் தலைவர் தரன்ஜித் சிங் தெரிவித்துள்ளார். 

இந்த சாதனையை, விஜய் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.