mersal got clearance from all the issues
விஜயின் மெர்சல் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து சென்னையில் விலங்குகள் நல வாரியம் இன்று அவசர ஆலோசனை நடத்தியது.
அதாவது படத்தில் ஒரு காட்சியில் விஜய் தன் கையில் புறா வைத்து இருப்பது போன்று ஒரு காட்சி எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்னதாக, பட பெயருக்கு சொந்தம் கொண்டாடி நீதிமன்றம் வரை சென்று, ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், படத்துக்கு புதிய சிக்கலாக விலங்குகள் நல வாரியம் புறா மூலம் செக் வைத்தது. இந்தச் சிக்கலை சரிசெய்ய தயாரிப்பாளர் தரப்பு விஜயை முதல்வரிடம் உதவியை நாடினால் படம் ரிலீஸ் ஆவதில் இருக்கும் சிக்கலை சமாளித்து விடலாம் என ஐடியா கொடுத்தார்களாம்.

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து பிரச்சனையை எடுத்து கூறினார் விஜய்.இதனைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணி அளவில் 'மெர்சல்' பிரச்னை குறித்து விலங்குகள் நல வாரியம் ஆலோசிக்க கூட்டத்தை தொடங்கியுள்ளது.

ஆலோசனை முடிவில்,மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியது.இதனால் பல தடைகளை மீறி மெர்சல் திரைப்படம் திரைக்கு வருவதால்,ரசிகர்கள் பெரும் கொண்டாடத்தில் உள்ளனர்
