mersal beat viveham
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ரசிகர்கள் மத்தியில் நேற்று மாஸாக வெளியான திரைப்படம் மெர்சல். இந்தப் படத்தின் ரிலீஸ்க்காக காத்திருந்த விஜய் ரசிகர்கள், படத்தின் வெளியீட்டை இரட்டை தீபாவளியாகக் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி, கடந்த 2 மாதத்திற்கு முன் வெளியான விவேகம் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை மெர்சல் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, விவேகம் படம், அதற்கு முன் வெளியான சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தது குறிப்பிடத் தக்கது.
நேற்றைய தினம் மட்டும் சென்னையில் மெர்சல் 1.52 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, விவேகம் 1.21 முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்ட் செய்தது. கபாலி திரைப்படம் 1.12 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
