mersal abroad box office collection

விஜய் மூன்று நாயகிகளுடன் கலக்கியுள்ள மெர்சல் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்ப்பிற்கு சற்றும் குறை வைக்காத அளவிற்கு மெர்சல் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் வெற்றியை அனைத்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே தமிழ் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வசூலில் சாதனை படைத்துள்ள மெர்சல், வெளிநாடுகளில் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மெர்சல் அமெரிக்காவில் திரையிடப்பட்ட பிரீமியர் காட்சி மற்றும் அதனைத் தொடர்ந்து திரையிடப்பட்ட முதல் காட்சியில் மட்டும் 434 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஆஸ்திரேலியாவில் ரூ 68 லட்சமும், அமெரிக்காவில் ரூ 98 லட்சமும் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது மெர்சல் என்பது குறிப்பிடத்தக்கது.