merina protest girl julie fellen love with aarav at bigboss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகர் ஆரவ் மீது, ஜல்லிக்கட்டு போராட்ட பொண்ணு ஜூலி காதல் வயப்பட்டுள்ளது போல் பேசும் ஒரு வீடியோ கிளிப்பிங்கை விஜய் டிவி தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழக மக்களை எப்போதுமே பரபரப்பாக வைத்திருப்பதில் நம்ம தொலைக்காட்சிகளை அடிச்சுக்கவே முடியாது போங்கோ... அதிலும் நம்ம விஜய் டிவி சொல்லவே வேண்டாம், ஜோடி நம்பர் ஒன் டான்ஸ் நிகழ்ச்சியில் சிம்பு அழுதது முதல், திவ்ய தர்ஷினி கமலிடம் முத்தம் வாங்கியது, இப்போது பிக் பாஸில் நடக்கும் கூத்து வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சிகள்.

விஜய் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறிவருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா, ஆராவை புரபோஸ் செய்து, எச்சைங்க, சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் பேசியது சமூகவலை தளங்களில் கண்டனங்கள் வலுத்துவந்த நிலையில், இதை மறக்கடிக்க இன்று ‘இதோ வந்துடுச்சி புது ட்விஸ்டு’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவை தனது முகநூலில் வெளியிட்டுள்ளது.

அதில், தனக்கு ஆரவ் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை பிடித்திருப்பதாகவும் ஜூலி காயத்ரி ரகுராமிடம் கூறுகிறார். இதை நமீதா மற்றும் சினேகன் ஆகியோரிடம் சொல்லி கிண்டலடித்து சிரிக்கின்றனர். 

இந்த கிளிப்பிங்கில் உள்ள காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. ஏற்கனவே, நடிகை ஓவியா, ஆராவை லவ் புரபோஸ் செய்த நிலையில், தற்போது ஜூலியும் ஓவியாவைப்போல காதல் வலையில் விழுந்துள்ளது வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

நாள்தோறும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வெஜ் விருந்து வைக்கும் இந்த பிக் பாஸ், கொலப்பசியில் இருப்பவர்களுக்கு பிரியாணியை கிடைச்சா சும்மா விடுவார்களா?