Mercel Rating is more than just the rating of the movie

மெர்சல் படத்திற்காக பல்வேறு இணையதளங்கள் வழங்கியுள்ள ரேட்டிங்கில், அஜித்தின் விவேகம் படத்தை ஒட்டுமொத்தமாக மெர்சல் முந்தியுள்ளது.

முன்னணி நடிகர்களின் ஒவ்வொரு படமும் வெளிவரும் போதும், அவருக்கு போட்டியாளராக உள்ள மற்ற முன்னணி நடிகரின் முந்தைய படத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம்.

இந்த வழக்கம், வேதாளம், தெறி, கபாலி, விவேகம் என்று தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்த வகையில், சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் ‘விவேகம்’ படத்திற்கு பல்வேறு இணையதளங்கள் ரேட்டிங் கொடுத்தன.

அப்படி விவேகம் படத்துக்கு கொடுத்த ரேட்டிங்கை, விஜய்யின் ‘மெர்சல்’ ஓவர்டேக் செய்து அசத்தியுள்ளது.

ஒவ்வொரு படத்துக்கும் ரேட்டிங் என்பது மிக முக்கியம். ஒரு படத்தின் கதை, தொழில்நுட்பம், நடிப்பு என பல்வேறு அம்சங்களை கவனித்து ரேட்டிங் கொடுக்கப்படுகிறது.

அந்த அடிப்படையில் அஜித்தின் விவேகம் படத்தை ரேட்டிங்கில் ஒட்டுமொத்தமாக முந்தியடித்து மெர்சல் திரைப்படம் மீண்டும் அசத்தியுள்ளது.